போதை ஊசிக்கு பலியான இளம்பெண்...! திருச்சியைக் உலுக்கிய காதல் விபரீதம்...! - காதலன் மற்றும் நண்பர் அதிரடி கைது...! - Seithipunal
Seithipunal


திருச்சி ஜங்ஷன் ரவுண்டானா அருகிலுள்ள தனியார் தங்கும் விடுதியில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பல்வேறு சந்தேகங்களையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தொடர்ந்து வெளியாகும் தகவல்கள் பரபரப்பை அதிகரித்துள்ளன.அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த சதாம் உசேன் (19), அவரது காதலி யாஸ்மின் (18) மற்றும் நண்பர் ஷேக் அப்துல்லா (19) ஆகியோர் தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தனர்.

இந்த நிலையில், யாஸ்மினுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிவித்து, அவரை இருவரும் அவசரமாக ஆட்டோவில் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், யாஸ்மின் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து தகவல் அறிந்த காவலர்கள் சம்பவ இடத்திற்கும் மருத்துவமனைக்கும் சென்று தீவிர விசாரணையை தொடங்கினர்.ஆரம்பக்கட்ட ஆய்வில், ‘டெபன்டாடல்’ எனப்படும் போதைப்பொருள் கலந்த மருந்து அதிகளவில் ஊசி மூலம் உடலில் செலுத்தப்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சித் தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தொடர்ந்து, அவர்கள் தங்கியிருந்த அறையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஏழு போதை மாத்திரை அட்டைகள், நீரில் கரைக்கப்பட்ட நிலையில் இருந்த இரண்டு குவளை போதை மருந்து கலவைகள் மற்றும் ஊசிகள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து சதாம் உசேன் மற்றும் ஷேக் அப்துல்லாவிடம் காவலர்கள் தீவிர விசாரணை நடத்தினர்.

இதற்கிடையில், யாஸ்மினின் தாயார் ஷகிலா பேகம் அளித்த புகாரின் அடிப்படையில், இளம்பெண்ணை அழைத்துச் சென்று மிரட்டல் விடுத்ததாக சதாம் உசேன் மற்றும் ஷேக் அப்துல்லா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

யாஸ்மின் உயிரிழப்பு தொடர்பாக தற்போது சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே மரணத்திற்கான துல்லியமான காரணம் உறுதியாக தெரியவரும் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்பின்னர் மட்டுமே அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தின் பின்னணியில் போதை மாத்திரை விற்பனை தொடர்பான மேலும் சில அதிர்ச்சி தகவல்களும் வெளியாகியுள்ளன. யாஸ்மினின் தாயார் ஷகிலா பேகம் மற்றும் அவரது மகன் ஜாகீர் உசேன் ஆகியோர் போதை மாத்திரை விற்பனை வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல், உயிரிழந்த யாஸ்மினும் இணையவழி மூலமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்திருக்கலாம் என்ற தகவலும் விசாரணையில் வெளிப்பட்டுள்ளது.

இதனால், இவர்களுக்கு போதைப் பொருட்களை வழங்கிய பின்னணி கும்பல் யார்? அவர்களுடன் இருந்த தொடர்புகள் என்ன? என்ற கோணங்களில் காவலர்கள் விசாரணையை விரிவுபடுத்தியுள்ளனர். இந்த வழக்கின் அடுத்தடுத்த தகவல்கள் மேலும் பல அதிர்ச்சி உண்மைகளை வெளிக்கொண்டு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு விசாரணை வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

young woman who fell victim drug injection love tragedy that shook Trichy Boyfriend and friend arrested dramatic action


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->