தனியார் நிதி நிறுவன நெருக்கடியால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு! தவிக்கும் 11 மாத குழந்தை!
young woman suicide
விருதுநகர், ராஜபாளையம் அருகே உள்ள ஆண்டாத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்தி குமார். இவரது மனைவி அய்யம்மாள். சக்திகுமாருக்கு முதல் திருமணம் விவாகரத்தான நிலையில் அய்யம்மாள் இரண்டாவதாக முறையாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு சிவமணி 11 மாத என்று ஆண் குழந்தை உள்ளது. சக்திகுமாருக்கு கடந்த சில மாதங்களாக சரியாக வேலை வாய்ப்பு கிடைக்காததால் குடும்பம் வறுமையில் சிக்கியது.
குழந்தையை வளர்க்கவும் குடும்பம் நடத்தவும் தவித்து வந்ததனால் அய்யம்மாள் தனியார் நிதி நிறுவன மகளிர் குழுவில் ரூ. 50,000 கடன் பெற்று மாதந்தோறும்தவணை தொகையை செலுத்தி வந்தார்.

இந்நிலையில் கடந்த மாதம் தவணை தொகையாக செலுத்த வேண்டிய பணம் செலுத்தாமல் காலதாமதம் ஆகியதால் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் அய்யம்மாள் வீட்டிற்குள் நுழைந்து கடன் தவணைத் தொகையை செலுத்த வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் கால அவகாசம் கேட்ட அய்யம்மாளை கடுமையான வார்த்தைகளால் தீட்டியுள்ளனர். இதனால் அய்யம்மாள் மனவேதனை அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதற்கிடையே வீட்டிற்குள் குழந்தை நீண்ட நேரமாக அழுது கொண்டே இருந்ததால் சந்தேகம் அடைந்த ஆக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது அய்யம்மாள் தூக்கு போட்ட நிலையில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.

இது தொடர்பாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ராஜபாளையம் தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பெயரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அய்யம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தனியார் நிதி நிறுவன பிரச்சனையால் அய்யம்மாள் தற்கொலை செய்து கொண்டாரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 மாத கைக்குழந்தையை வைத்துக்கொண்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.