ராணிப்பேட்டையில் கொடூரம் - மகள்களை கிண்டல் செய்தைத் தட்டிக்கேட்ட தந்தை கொலை.!
young mans kill to old man in ranipet
ராணிப்பேட்டையில் கொடூரம் - மகள்களை கிண்டல் செய்தைத் தட்டிக்கேட்ட தந்தை கொலை.!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள லாலாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுந்தரேசன். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவருக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

இவர்களில் மகள்கள் இரண்டு பேரும் வாலாஜா பகுதியில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மகளிர் கல்லூரியில் படித்து வருகின்றனர். இந்த நிலையில், மகள்கள் இருவரும் நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல் கல்லூரி சென்றுவிட்டு வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தனர்.
அப்போது லாலாப்பேட்டையை சேர்ந்த அஜித் மற்றும் சரண் உள்ளிட்ட இருவரும் சுந்தரேசன் மகள்களை கிண்டல் செய்துள்ளனர். இதனை மாணவிகள் இருவரும் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சுந்தரேசன் சம்பவம் குறித்து, அஜித் மற்றும் சரணிடம் விசாரித்துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த இளைஞர்கள் இருவரும் சுந்தரேசனை கடுமையாகத் தாக்கி, கத்தியால் சுந்தரேசனின் தலையில் வெட்டியுள்ளனர். இதனால், பலத்த காயம் அடைந்த சுந்தரேசனை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர் சுந்தரேசன் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சுந்தரேசன் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அஜித் மற்றும் சரண் உள்ளிட்டோரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பேரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
English Summary
young mans kill to old man in ranipet