ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்திச் சென்று திருமணம்.. 2 இளைஞர்களுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை.
Young mans kidnapped girl and marry in Krishnagiri
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் 16 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இதில் கோவில்கொட்டாயை சேர்ந்த வேடியப்பன் வயது 28 என்ற இளைஞர் சிறுமியை காதலித்து வந்துள்ளார்.
பல நாட்களாக சிறுமியிடம் பழகி வந்த வேடியப்பன் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்துள்ளார்.

இதில் கடந்த 2021 ஆம் ஆண்டு வேடியப்பன் தனது நண்பரான குணசேகர் (வயது 29) என்பவருடன் சேர்ந்து சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து உள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் வேடியப்பன் மற்றும் குணசேகர் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதனை அடுத்து இந்த வழக்கை விசாரித்த கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றம் குணசேகரன் மற்றும் வேடியப்பன் ஆகிய இருவருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
English Summary
Young mans kidnapped girl and marry in Krishnagiri