சென்னையில் பயங்கரம்.! ஆட்டோவில் தூங்கிய வாலிபர்... கழுத்தறுத்து கொடூர கொலை.!
Young man who slept in an auto was strangled to murder in chennai
சென்னையில் ஆட்டோவில் தூங்கிய வாலிபர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவெற்றியூர் பகுதியை சேர்ந்தவர் மோகன் (33). இவர் புது வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள முருகன் கோவில் திருவிழாவிற்காக பந்தல் போட்டுக் கொண்டிருந்தார். பின்பு இரவு வேலை முடிந்ததும் மது அருந்திய மோகன், அதே பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோவில் படுத்து தூங்கியுள்ளார்.
இதையடுத்து இன்று அதிகாலை, ஆட்டோவை எடுப்பதற்காக ஆட்டோ ஓட்டுனர் வந்த போது, ஆட்டோவுக்குள் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் மோகன் இறந்து கிடந்துள்ளார். இதைத்தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த மோகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், ஆட்டோவில் தூங்கிய மோகனை கழுத்தறுத்து கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Young man who slept in an auto was strangled to murder in chennai