மதுபோதையில் தகராறு.! தொழிலாளியின் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொன்ற வாலிபர் கைது.! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டத்தில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் தலையில் கல்லை போட்டு தொழிலாளியை கொடூரமாக கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் பஜனை கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் நீலகண்டன். இவர் சம்பவத்தன்று பரனுர் சுடுகாடு சாலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்து உள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில், நீலகண்டனுக்கும் அதே பகுதியை சேர்ந்த பூவரசன் குடும்பத்தினருக்கும் இடையே நிலப்பிரச்சினை இருந்துள்ளது.

இதனால் சம்பவத்தன்று மது போதையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட நிலையில் நீலகண்டன், பூவரசன் குடும்பத்தினரை தவறாக பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பூவரசன், அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Young man who killed a laborer by throwing a stone on his head in a drunken dispute was arrested in Chengalpattu


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->