"தல" படத்தை தலையால் வரைந்து பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய வாலிபர்.! - Seithipunal
Seithipunal


"தல" படத்தை தலையால் வரைந்து பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய வாலிபர்.!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஓவியர் சு.செல்வம். இவர் அல்டிமேட் ஸ்டார் அஜித்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து கூறும் வகையில் தன்னுடைய கைகளைப் பயன்படுத்தாமல் தன்னுடைய தலையில் கம்பி வளையத்தில் பிரஷை பொருத்தி தன் தலையை அசைத்து அசைத்து 15 நிமிடங்களில் 'தல' படத்தை தலையால் வரைந்து அசத்தியுள்ளார்.

இந்த ஓவியம் குறித்து அவர் தெரிவித்ததாவது, "தற்போதைய தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதை வென்ற முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித் குமார். இவர் தனது இளமைப் பருவத்தில் இருந்தே ரேஸ் கார், பைக் ஓட்டுவதில் ஆர்வம் காட்டி ரேஸ்களில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார்.

சர்வதேச அரங்கில் நடைபெறும் ரேஸ்களில் பங்கேற்கும் இந்தியர்களில் ஒருவர் என்ற பெருமையும், ஃபார்முலா சாம்பியன் போட்டியில் வெற்றி பெற்ற ஒரே இந்திய நடிகரென்ற பெருமையையும் பெற்றவர். எந்த விதமான சினிமாப் பின்னணியும் இல்லாமல், தமிழ் திரையுலகில் நுழைந்து, உழைப்பால் முன்னேறி, தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ளார். 

ரசிகர்கள் மனதில் 'தல' என்று அன்போடு நிலைத்திருப்பவர். அதனால் அவருக்கு என் தலையால் ஓவியம் வரைந்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளேன்" என்றுக் கூறினார். இந்த ஓவியத்தை "தல" ரசிகர்கள் வியந்து பார்த்து ஓவியர் செல்வத்திற்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

young man painting by head for actor ajith birthday


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->