சுற்றுலா வந்த கேரளா இளைஞர் - நீரில் மூழ்கி உயிரிழப்பு.!!
young man died drowned water in kanniyakumari
சுற்றுலா வந்த கேரளா இளைஞர் - நீரில் மூழ்கி உயிரிழப்பு.!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சிற்றாறு அணைக்கு தமிழகம் மட்டுமல்லாது கேரள மாநிலத்தில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இந்த சிற்றாறு அணையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு குடும்பத்தினர் சுற்றுலா வந்தபோது, அந்த அணையில் மூழ்கி பள்ளி மாணவர் ஒருவர் உயிரிழந்து இருந்தார்.
இதைத்தொடர்ந்து இந்த அணையில் குளிப்போருக்கு அப்பகுதிவாசிகள் சார்பில் தொடர்ந்து எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் கேரள மாநிலத்தில் வெள்ளாடை அருகில் உள்ள மணக்காலை பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் என்பவரது மகன் பிரதீப் தன் நண்பர்களுடன் காரில் சிற்றாறு அணைக்கு நேற்று சுற்றுலா வந்தார்.

அதன் படி அவர்கள் வைகுண்டம் பகுதியில் குளிப்பதற்கு இறங்கினர். அங்கு பிரதீப்பின் நண்பர்கள் மட்டும் குளித்து முடித்துவிட்டு கரை ஏறியுள்ளனர். ஆனால் உடன் வந்த பிரதீப் மட்டும் கரை திரும்பவில்லை. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் சம்பவம் குறித்து தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனர்.
அதன் படி அவர்கள் விரைந்து வந்து பிரதீப்பை தீவிரமாகத் தேடிவந்தனர். இருப்பினும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையே பிரதீப்பின் உடல் இன்று மதியம் தண்ணீரின் மேல் மிதந்தது. உடனே வீரர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுற்றுலா வந்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
young man died drowned water in kanniyakumari