விழுப்புரத்தில் பரபரப்பு - போதையில் மூதாட்டிக்கு பாலியல் தொல்லை - 21 வயது வாலிபர் கைது.!
young man arrested for sexuall harassment to old lady in vilupuram
விழுப்புரத்தில் பரபரப்பு - போதையில் மூதாட்டிக்கு பாலியல் தொல்லை - 21 வயது வாலிபர் கைது.!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியை அடுத்த வீரமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அஞ்சலை. 80 வயதான இவர் தனது மூத்த மகளுடன் வசித்து வருகிறார். மூதாட்டி அஞ்சலை வயது முதிர்வால் வீட்டை விட்டு வெளியே வராமல் அங்கேயே முடங்கி வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில், மூதாட்டியின் மகள் முக்கிய நிகழ்ச்சி காரணமாக வெளி ஊருக்குச் சென்றுள்ளார். அதனால், மூதாட்டி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இவர்களது வீட்டிற்கு பக்கத்தில் குகன் என்ற 21 வயது இளைஞர் வசித்து வருகிறார்.
இவர் கஞ்சா போதையில் மூதாட்டிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். அப்போது பாட்டி கத்திக் கூச்சலிட்டுள்ளார். இந்த அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். ஆனால், அதற்குள் அந்த இளைஞர் அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார்.
இதையடுத்து அவர்கள் மூதாட்டியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே மூதாட்டியின் மூத்த மகன் சம்பவம் தொடர்பாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியான குகனைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கஞ்சா போதையில் இளைஞர் மூதாட்டியை பாலியல் வழிகொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
young man arrested for sexuall harassment to old lady in vilupuram