தொழில் முனைவு திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்..மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல்!
You can apply to benefit from the entrepreneurship scheme District Collector M Prathaps information
திருவள்ளூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) திருவள்ளூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டம் என்ற திட்டம் செயல்பட்டு வருகிறது.
இத்திட்டத்திற்கான நடப்பு ஆண்டு (2025-26) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இத்திட்டத்தின் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமுதாய மக்கள் பொருளாதாரத்தின் முன்னேற்றம் அடைய மிகவும் பயனுள்ளதாக இத்திட்டம் அமையும் என்ற நோக்கத்துடன் இத்திட்டம் செயல்படுகிறது.
இத்திட்டத்தில் பயன் பெற 18 முதல் 55 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவர்களாக இருத்தல் வேண்டும், சாதி சான்று, வருமான சான்று (ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்) குடும்ப அட்டை, விலைப்புள்ளி, திட்ட அறிக்கை, ஆதார் அடையாள அட்டை, வங்கி புத்தகம் நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் வாகன கடனுக்கு ஓட்டுநர் உரிமம் (பேட்ஜ்) நகல் ஆகிய சான்றுகளுடன் newscheme.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்து பயன் பெறலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.
English Summary
You can apply to benefit from the entrepreneurship scheme District Collector M Prathaps information