போலி ஆதார் அட்டை மூலம் பணியாற்றும் தொழிலாளர்கள்:  என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை!  - Seithipunal
Seithipunal


திருப்பூர், பனியன் நிறுவனங்களில்  வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்தும் வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் பணியாற்றுகின்றனர்.

இதுபோல் பணியாற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர் போலியான ஆதார் அட்டைகளை தயாரித்து அதன் மூலம் பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். 

இதுகுறித்து அவ்வபோது திருப்பூர் மாவட்ட போலீசார் சோதனை நடத்தி போலியான ஆதாரங்கள் மூலம் பணியில் சேர்ந்துள்ள தொழிலாளர்களை கைது செய்து வருகின்றனர். 

இந்நிலையில், பல்லடம் பகுதிகளில் அதிக அளவில் வடமாநில தொழிலாளர்கள் வேலைபார்க்கும் நிறுவனங்களில் இன்று காலை என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது அங்கு பணியாற்றி வந்த வட மாநில தொழிலாளர்களின் ஆதார் கார்டு மற்றும் பல ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டது. 

மேலும் வங்கதேச தொழிலாளர்களை திருப்பூருக்கு வேலைக்கு அழைத்து வரும் முகவர்களின் விவரம் குறித்தும், அவர்கள் தங்கி இருக்கும் இடங்கள் குறித்தும் சோதனை நடத்தப்பட்டது. சோதனை நடைபெற்ற போது அந்த பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Workers using fake Aadhaar card NIA Officers check


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->