திருச்சியில் இன்று (25.11.2022) பெண்களுக்கான மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தபடாமல் இருந்தது. அதன் காரணமாக, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவித்து வந்தனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்று (நவம்பர் 25ம் தேதி) மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இணைந்து நடத்தும் மகளிருக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் டாடா எலக்ட்ரானிக்ஸ் ப்ரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் ஓசூா் ஆலைக்கு நிரந்தரமாக பணிபுரிய தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு கல்வித்தகுதியாக 12ம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், வயது வரம்பு 18 முதல் 20 வயதுக்குள் இருக்க வேண்டும்.

இந்த நிறுவனத்தில் பணிபுரிய விரும்புபவர்கள் தங்களது புகைப்படம், கல்வி சான்றிதழ்கள், சுயவிவரக் குறிப்பு, ஆதாா் அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு இன்று (நவம்பர் 25 ஆம் தேதி) காலை 10.30 மணிக்கு நேரில் வந்து முகாமில் பங்கேற்கலாம். மேலும், விவரங்களுக்கு 0431-2413510 என்ற தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Women's Employment camp in Trichy today


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->