எமனாக வந்த சிக்கன் ரைஸ் - திருமங்கலம் அருகே இளம்பெண் பலி..!
women died for eat chicken rice in madurai thirumangalam
சிக்கன் ரைஸ் சாப்பிட்ட இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பொன்னமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. கூலித்தொழிலாளியான இவருடைய மகள் பாண்டிச் செல்வி. இவர் நேற்று மதியம் விருதுநகர் சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் சிக்கன் ரைஸ் வாங்கி சாப்பிட்டுள்ளார்.

ஆனால், சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே வாந்தி எடுத்து மயக்கமடைந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன் படி அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை பார்த்து பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து திருமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருமங்கலம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
women died for eat chicken rice in madurai thirumangalam