குழந்தை வரம் கேட்டு சித்தர் சமாதியில் குவிந்த பெண்கள் - மண்சோறு சாப்பிட்டு வழிபாடு.! - Seithipunal
Seithipunal


குழந்தை வரம் கேட்டு சித்தர் சமாதியில் குவிந்த பெண்கள் - மண்சோறு சாப்பிட்டு வழிபாடு.!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு அடுத்த கோட்டுப்பாக்கம் கிராமத்தில், சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பரதேசி ஆறுமுக சுவாமிகள் என்பவரின் ஜீவசமாதி உள்ளது. அங்கு கோவில் கட்டி, கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர். 

இங்கு ஒவ்வொரு வருடமும் ஆடி அமாவாசையன்று சித்தருக்கு குருபூஜை செய்யப்படுவது வழக்கம். அதன்படி ஆடி இந்த வருடம் அமாவாசை தினமான நேற்று, 187ம் ஆண்டு குரு பூஜை விழா நடைபெற்றது. இந்த விழாவை  முன்னிட்டு ஜீவ சமாதியில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தப்பட்டன.  

அதன் பின்னர் குழந்தை இல்லாத பெண்களுக்கு சுவாமிக்கு படையலிட்ட பிரசாதம், வழங்கப்பட்டது. அதனை வாங்கி கொள்ளும் பெண்கள் குளக்கரையில் வைத்து மண் சோறு சாப்பிட்டு குழந்தை வரம் வேண்டி வழிபட்டனர். 

குழந்தை இல்லாமல், இங்கு பிரார்த்தனை செய்து குழந்தை பெற்ற தம்பதியர்கள் ஏராளமானோர் இங்கு வந்து நேர்த்திக்கடனை செலுத்தினர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

womans eating mud rice for praying baby boon in tiruvannamalai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->