திருச்சி || பட்டா வழங்க பத்தாயிரம் - கையும் களவுமாக பிடிபட்ட பெண் விஏஓ.!
woman vao arrested for bribe in trichy
திருச்சி || பட்டா வழங்க பத்தாயிரம் - கையும் களவுமாக பிடிபட்ட பெண் விஏஓ.!
திருச்சி மாவட்டத்தில் உள்ள மாராடி கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யா. இலவச வீட்டு மனைப் பட்டா கோரி விண்ணப்பித்திருந்த இவருக்கு இலவச வீட்டு மனையும் ஒதுக்கப்பட்டது. அதற்கான உத்தரவை பெறுவதற்காக சத்யா கடந்த வாரம் பச்சமலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்குச் சென்றிருந்தார்.
ஆனால், அங்கு அவருக்கு ஆணை வழங்கப்படவில்லை. இதையடுத்து, சத்யா மாராடி கிராம நிர்வாக அலுவலர் சுமதியைத் தொடர்பு கொண்டு பேசியபோது, சுமதி வீட்டு மனைக்கான உத்தரவு வழங்க ரூ.10,000 லஞ்சம் கேட்டுள்ளார். பின்னர் பேரம் பேசி 7 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க முடியும் என்று விஏஓ சுமதி தெரிவித்துள்ளார்.

ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத சத்யா திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரை அணுகி, புகார் அளித்தார். அதன் படி போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை சத்யாவிடம் கொடுத்து அதனை விஏஓ சுமதியிடம் கொடுக்குமாறு கொடுத்து அனுப்பினர்.
இதைத்தொடர்ந்து, சத்யா பணத்தை விஏஓ சுமதியிடம் கொடுக்கும் போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவரை கையும் களவுமாக கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் வருவாய் துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
woman vao arrested for bribe in trichy