ராணுவ வீரர்களுக்கு நாம் என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்...! - நன்றி தெரிவித்த விராட் கோலி
We forever indebted soldiers Virat Kohli thanks them
இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக தாக்குதல் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.இதில் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பயங்கரவாத குழுக்கள், இந்திய எல்லைப் பகுதியில் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருவதுடன்,''ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள்'' மூலம் தாக்குதல் சம்பவங்களில் அதிகரித்துக் காணப்படுகின்றன.

இதில் இந்திய ராணுவம் மிகச்சிறப்பாக இந்தத் தாக்குதல்களை அறவே தடுத்து நிறுத்தி இருக்கிறது.இந்த சூழலில்,இந்திய ராணுவ வீரர்களுக்கு கிரிக்கெட் வீரர் 'விராட் கோலி' தனது எக்ஸ் வலைதளப் பக்கம் மூலம் நன்றி தெரிவித்துள்ளார் .
விராட் கோலி:
இதுகுறித்து விராட் கோலி அவர்கள் தெரிவித்ததாவது,"இக்கட்டான நேரத்தில் நாட்டை பாதுகாத்து அரணாக நிற்கும் ராணுவ வீரர்களுக்கு துணை நிற்போம். இந்த ஹீரோக்களுக்கு நாம் என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம்.
ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தின் தியாகங்களுக்கு மனமார்ந்த நன்றி. ஜெய் ஹிந்த்! " எனக் குறிப்பிட்டுள்ளார்.இது தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
English Summary
We forever indebted soldiers Virat Kohli thanks them