தனது இன்னுயிரை ஈந்த முரளி நாயக்கிற்கு எனது அஞ்சலிகள்...!- சந்திரபாபு நாயுடு
My tributes to Murali Naik who laid down his life Chandrababu Naidu
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்திய எல்லை பகுதிகளில் பாகிஸ்தான் 'டிரோன் தாக்குதல்' நடத்தி வருகிறது.

இதற்கு பதிலாக இந்திய ராணுவமும் தாக்குதல் நடத்தி வருகிறது.இந்நிலையில், பாகிஸ்தான் நடத்திய தாக்குதலை முடிறயடித்தபோது, இந்திய வீரர் ''முரளி நாயக்'' வீர மரணம் அடைந்துள்ளார்.
இதில், வீர மரணமடைந்த 'முரளி நாயக்', ஆந்திராவின் சத்ய சாய் மாவட்டத்தை சேர்ந்தவர். இதைத்தொடர்ந்து அவரது மறைவுக்கு ஆந்திர முதல்-மந்திரி 'சந்திரபாபு நாயுடு' இரங்கல் தெரிவித்துள்ளார்.இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.
சந்திரபாபு நாயுடு:
அதில் அவர் குறிப்பிட்டதவது," முரளி நாயக் வீர மரணம் அடைந்த செய்தி மிகுந்த வருத்தம் அளிக்கிறது. நாட்டிற்காக தனது இன்னுயிரை ஈந்த முரளி நாயக்கிற்கு எனது அஞ்சலிகள். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும்,முரளி நாயக் வீர மரணத்துக்கு பலரும் இணையத்தில் தங்களது வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.
English Summary
My tributes to Murali Naik who laid down his life Chandrababu Naidu