ஆம்புலன்சில் கஞ்சா கடத்தல் - திருவாரூரில் 4 பேர் கைது.!!
4 peoples arrested for kanja kidnape in thiruvarur
தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து கோயில்வெண்ணி வழியாக திருவாரூருக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தில் கஞ்சா கடத்தப் படுவதாக நீடாமங்கலம் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அந்தத் தகவலின் படி கோயில்வெண்ணி சோதனைச் சாவடியில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, போலீசார் சந்தேகத்தின் பேரில் ஆம்புலன்ஸ் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், பொட்டலங்களில் 110 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி, ஆம்புலன்ஸை ஓட்டி வந்தவர் ஒடிசா மாநிலம் கஜபதி மாவட்டத்தைச் சேர்ந்த நீலகண்ட நாயக், மார்சல் டெரான்ஸ் ராஜா ஆகியோரை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

அந்த விசாரணையில் வேதாரண்யம் ஆய்காரன்காடு பெரிய குத்தகை கிராமத்தைச் சேர்ந்த மு.முனீஸ்வரன், தஞ்சாவூர் மாவட்டத்தை ராஜாமடம் நடுத் தெருவைச் சேர்ந்த நா.குமார் உள்ளிட்டோர் மூலம் இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருந்ததாக தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, போலீஸார் அவர்கள் இரண்டு பேரையும் கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
4 peoples arrested for kanja kidnape in thiruvarur