வேலூர் || கந்துவட்டியால் நேர்ந்த கொடூரம் - பிள்ளைகளை தவிக்கவிட்டு தாய் செய்த விபரீத முடிவு.!
woman sucide for debt problam in vellore kudiyatham
வேலூர் மாவட்டத்தில் உள்ள, குடியாத்தம் அடுத்த சாமியார் மலைப் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ். கட்டட மேஸ்திரியாக பணிபுரிந்து வரும் இவர் இவரது மனைவி மோனிஷா. இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தையு ம் இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர்.

இந்த நிலையில், தினேஷ் குடும்ப சூழல் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த மாலதி என்பவரிடம் 10 மாதங்களுக்கு முன்பு 30 ஆயிரம் ரூபாய் கந்து வட்டிக்குக் கடனாக வாங்கியுள்ளார். அதாவது, 15 நாட்களுக்கு ஒருமுறை 10 ரூபாய் வட்டியுடன் மொத்தம் எழுபது ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று கடன் கொடுத்த மாலதி தெரிவித்துள்ளார்.
அதன் படி, தினேஷ் முதல்கட்டமாக முப்பது ஆயிரம் ரூபாய் பணத்தை செலுத்தியுள்ளார். மீதி பணத்தை செலுத்தாததனால், அதனை தர சொல்லி மாலதி அவதூறாக பேசி மிரட்டி உள்ளார்.

இதனால், மன உளைச்சலுக்கு ஆளான தினேஷின் மனைவி மோனிஷா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக இதுகுறித்து குடியாத்தம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மாலதியை கைது செய்ய கோரி தினேஷின் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து, போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்ததை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
woman sucide for debt problam in vellore kudiyatham