மதுரையில் சோகம் - குழந்தைகளுடன் பெண்காவலர் தற்கொலை.! பணியிட மாற்றம் தான் காரணமா?
woman police sucide with childrens in madurai
மதுரையில் சோகம் - குழந்தைகளுடன் பெண்காவலர் தற்கொலை.! பணியிட மாற்றம் தான் காரணமா?
மதுரை மாவட்டத்தில் உள்ள அய்யர்பங்களாவைச் சேர்ந்தவர்கள் சுப்புராஜ் – ஜெயலட்சுமி தம்பதியினர். இதில், ஜெயலெட்சுமி மதுரை ரயில்வே காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார்.
இவர், சமீபத்தில் திருச்சி ரயில்வே காவல் நிலையத்திற்கு மாறுதல் செய்யப்பட்டார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஜெயலட்சுமி கடந்த சில நாட்களாக மருத்துவ விடுப்பில் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், ஜெயலட்சுமி நேற்று மாலை தனது இரண்டு குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் சமயநல்லூர் அருகே சென்றார். அங்கு அவர், தனது குழந்தைகளுடன் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அந்தத் தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
தண்டவாளத்தில் சிதறிக் கிடந்த மூன்று உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
woman police sucide with childrens in madurai