தனியார் பள்ளி பேருந்து மோதி பெண் பலி.. தப்பி ஓடிய டிரைவர்.. மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்..! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி பேருந்து மோதி பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பாரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மனைவி ராதா. இந்நிலையில், ராதா இன்று காலை தனது குழந்தைகளை பள்ளியில் விட்டுவிட்டு, மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்பொழுது அவ்வழியாக வந்த தனியார் பள்ளி பேருந்து ஒன்று எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ராதா பள்ளி பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் பள்ளி பேருந்து ஓட்டுனர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த ராதாவின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், தப்பி ஓடிய ஓட்டுனரை கைது செய்ய வேண்டும் என்றும், உயிர் இழந்த ராதாவின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து போலீசார், பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இருப்பினும் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட மறுத்து தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Woman killed in private school bus collision in Tiruppur


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->