அரியலூர் : தீயில் சிக்கிய மகனைக் காப்பாற்ற முயன்ற தாய் - உடல் கருகி உயிரிழப்பு.!
woman died and boy injured for fire accident in ariyalur
அரியலூர் : தீயில் சிக்கிய மகனைக் காப்பாற்ற முயன்ற தாய் - உடல் கருகி உயிரிழப்பு.!
அரியலூர் மாவட்டத்தில் உள்ள விக்கிரமங்கலம் அருகே அம்பலவர் கட்டளை கிராமத்தில் இந்திரா காலனியை சேர்ந்தவர் வினோத் மனைவி பூபதி. இவர், சம்பவத்தன்று தனது வீட்டிற்கு வெளியே விறகு அடுப்பில் உணவு சமைத்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு விளையாடிக்கொண்டு இருந்த பூபதி மகன் பிரஜின் அடுப்பிற்கு அருகே வைத்திருந்த மண்எண்ணெயை கீழே கொட்டி உள்ளார். இதில் சிறுவன் மீது தீப்பற்றியது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பூபதி தனது மகனை தீயில் இருந்து காப்பாற்ற முயன்றுள்ளார்.

ஆனால், எதிர்பாராதவிதமாக அவருடைய சேலையில் தீப்பற்றியது. இந்த விபத்தில் இரண்டு பேரும் உடல் கருகி வலியால் அலறி துடித்துள்ளனர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்த வினோத் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.
அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் பூபதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
சிறுவன் பிரஜின் மட்டும் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைமேற்கொண்டு வருகின்றனர். பூபதிக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகளே ஆவதால் இந்த சம்பவம் தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.
English Summary
woman died and boy injured for fire accident in ariyalur