திமுக பெண் கவுன்சிலர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்! கைதான தம்பதி அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்! ஆடிப்போன போலீசார்!
woman councilor murdered case arrested couple Shocking confession
ஈரோடு, சோழ காளிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராசு (வயது 57) இவர் அதே பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ரூபா (வயது 42) இவர் சென்னை சமுத்திரம் பேரூராட்சியில் தி.மு.க கவுன்சிலராக இருந்து வந்தார்.
இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இதற்கு இடையே ரூபா, கரூர் மாநகர பகுதியில் உள்ள ஜவுளி ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் வீட்டில் பணியாற்றி வந்துள்ளார்.
நேற்று முன்தினம் வழக்கம் போல் ரூபா வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்று பின்னர் இரவு வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் ரூபாவை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் நேற்று மதியம் கரூர் பவுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட பாலமலை முருகன் கோவில் அருகே உள்ள காட்டுப்பகுதியில் ரூபா தலை நசுங்கிய நிலையில் அரை நிர்வாணமாக உயிரிழந்து கிடந்தார்.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரூபா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் தடவியல் நிபுணர்கள் மற்றும் போலீஸ் மோப்ப நோய்களை வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ரூபாவுடன் ஜவுளி ஏற்றுமதி நிறுவன உரிமையாளர் வீட்டில் சேர்ந்து பணியாற்றும் நித்யா என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.
அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், ரூபா அணிந்திருந்த நகைக்கு ஆசைப்பட்டு அவரை நித்யா தனது கணவருடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.

இதனை அடுத்து நித்யா (வயது 28) அவரது கணவர் கதிர்வேல் (வயது 33) இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைதான தம்பதியினர் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்திருப்பதாவது, ''எனது கணவர் ஈரோடு-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
ரூபா வேலைக்கு வரும்போது அதிகமான நகை அணிந்து வருவதாக எனது கணவரிடம் தெரிவித்தேன். நகைக்கு ஆசைப்பட்டு ரூபாவை நாங்கள் கொலை செய்ய திட்டமிட்டு, நேற்று முன்தினம் காலை வேலைக்கு வந்த ரூபாவிடம் பாலமலை முருகன் கோவிலுக்கு செல்லலாம் என அழைத்தேன்.

அவரும் என்னுடன் முருகன் கோவிலுக்கு வந்தார். அப்போது அங்கு தயாராக இருந்த என் கணவர் ரூபாவின் கழுத்தை நெறித்து தலையில் கல்லை வைத்து நசுக்கி கொலை செய்து விட்டு பின்னர் அவர் அணிந்திருந்த நகைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டோம்.
போலீசாரை திசை திருப்புவதற்காக அவரது ஆடையை களைத்து அரை நிர்வாணமாக்கி விட்டு சென்றோம். இருப்பினும் போலீசார் எங்களை பிடித்து விட்டனர்'' என ஓர் அதிர்ச்சி வாக்குமூலத்தை அளித்தனர்.
English Summary
woman councilor murdered case arrested couple Shocking confession