போலி ஆவணம் மூலம் நில அபகரிப்பு செய்த கில்லாடி பெண்.! திருப்பூரில் பரபரப்பு.!
woman cheating land fake documet in tirupur
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ராமர், பழனிசாமி, வேலுச்சாமி, சோமசுந்தரம் உள்ளிட்டோருக்கு, கணக்கம்பாளையம் கிராமத்தில் கடந்த 2001-ம் ஆண்டு தலா இரண்டு ஏக்கர் விவசாய நிலத்தை அரசு வழங்கியது.
இவர்களது நிலத்திற்குப் பக்கத்து நிலத்தின் சொந்தக்காரர் ஊர்மிளா ஸ்ரீதர் இந்த நாலுபேரிடமும், அவர்களது நிலத்தை விலைக்கு கேட்டுள்ளார். ஆனால், நால்வரும் அவர்களது நிலத்தை விற்பனை செய்ய மறுத்துள்ளனர்.

இதையடுத்து, ஊர்மிளா ஸ்ரீதர் அந்த நாலு பேரின் நிலங்களையும் போலியான ஆவணங்களைத் தயாரித்து, தனது பெயரில் பதிவு செய்து மோசடி செய்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட நான்கு பேரும் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
அந்தப் புகாரில், "ஏற்கெனவே இறந்து போனவர்களின் ஆதார் அட்டைகளின் மூலமாக எங்களது ஆதார் அட்டைகளைப் போலியாகத் தயாரித்து விவசாயம் செய்வதற்காக அரசு எங்களுக்கு வழங்கிய நிலங்களைத் தனது பெயருக்கு ஊர்மிளா ஸ்ரீதர் ஆவணமாற்றம் செய்துள்ளார்" என்று தெரிவித்துள்ளனர்.
English Summary
woman cheating land fake documet in tirupur