மீண்டும் மீண்டுமா? பாஜக கூட்டணியில் ஓபிஎஸ்? ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் கூட்டணிக்குள் வரவழைக்கும் பாஜக முயற்சி? - Seithipunal
Seithipunal


பாஜக கூட்டணியில் இருந்து விலகிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை (ஓபிஎஸ்) மீண்டும் இணைக்க முயற்சி நடைபெறுகிறது என தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, தனது அரசியல் நிலைப்பாட்டை நிலைநிறுத்த அதிமுக தொண்டர் உரிமை மீட்பு குழு அமைத்து, பாஜக கூட்டணியில் இணைந்து செயல்பட்டார் ஓபிஎஸ். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

நாடாளுமன்றத் தேர்தலின் போது, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை கூட்டணியில் நிலைநிறுத்த முக்கிய பங்கு வகித்தார். ஆனால் மாநிலத் தலைமை மாற்றத்துக்குப் பிறகு, ஓபிஎஸ்-ன் முக்கியத்துவம் குறைந்ததாகக் கூறப்படுகிறது.

இதன் விளைவாக, அண்மையில் தமிழகத்திற்கு வந்த அமித் ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க ஓபிஎஸ் முயன்றும் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் விரக்தியடைந்த அவர், கூட்டணியில் இருந்து விலகுவதாக வெளிப்படையாக அறிவித்தார்.

ஆனால் தற்போதைய மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “ஓபிஎஸ் என்னிடம் கூறியிருந்தால் மோடியை சந்திக்க ஏற்பாடு செய்திருப்பேன்” என்று தெரிவித்துள்ளார். அதற்கு பதிலாக, “முட்டுக்கட்டையாக இருந்ததே நயினார் தான்” என்று ஓபிஎஸ் குற்றஞ்சாட்டினார்.

இந்நிலையில், பாஜக அமைப்புச் செயலாளர் பி.எல். சந்தோஷ் நாளை சென்னை வரவுள்ளார். அதற்கு முன், முன்னாள் தலைவர் அண்ணாமலை டெல்லியில் அவரைச் சந்தித்து, தேர்தல் சீட்டுகள், தொகுதிப் பகிர்வு உள்ளிட்ட விவகாரங்களோடு, ஓபிஎஸை மீண்டும் கூட்டணியில் இணைக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்ணாமலையின் கோரிக்கையை ஏற்ற பி.எல். சந்தோஷ், ஓபிஎஸை சந்திக்க சம்மதித்துள்ளார். இதையடுத்து, பாஜக முக்கிய நிர்வாகி ஒருவர் ஓபிஎஸை தொடர்பு கொண்டு சந்திப்பு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், “கூட்டணி முறிந்துவிட்டது என்று அறிவித்த பிறகு சந்திப்பது எப்படி சாத்தியம்?” என்று சந்தேகம் எழுப்பிய ஓபிஎஸ், மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசித்த பிறகு முடிவை தெரிவிப்பதாக கூறி, அழைப்பை இடைநிறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Will it come back OPS in the BJP alliance BJP attempt to bring O Panneerselvam back into the alliance


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->