அடிமைகள் உடம்பில் ரத்தம் எதற்கு? “விஜய் பாஜகவிற்கு மறைமுக ஆதரவு? – திமுக ஐடி விங் கார்ட்டூன் வெளியீட்டு விமர்சனம்!
Why is there blood in the bodies of slaves Vijay is indirectly supporting BJP DMK IT Wing criticizes cartoon publication
தமிழக அரசியலில் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது நடிகர் விஜயைச் சுற்றிய நிகழ்வுகள்.ஆரம்பத்தில் பாஜகவை தனது “கொள்கை எதிரி” எனக் கடுமையாக விமர்சித்திருந்த விஜய், கரூரில் நடந்த விபத்துக்குப் பிறகு அதிமுக மற்றும் பாஜக ஆதரவைப் பெற்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதமாக மாறியுள்ளது.
2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடேறிக் கொண்டிருக்கிறது.திமுக தனது கூட்டணியை வலுப்படுத்தி வரும் நிலையில், அதிமுக முதலில் தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அது பலனளிக்காமல் போனதால், பாஜகவுடன் இணைந்து தேர்தல் தயாரிப்பைத் தொடங்கியது.
இந்தச் சூழ்நிலையில், தமிழகமெங்கும் மக்களைச் சந்தித்து பிரச்சாரம் செய்த விஜய் — “திமுக என் அரசியல் எதிரி, பாஜக என் கொள்கை எதிரி” என தீவிரமாக பேசியிருந்தார்.அதிமுக பாஜகவிடம் அடகு வைத்துவிட்டதாகவும் அவர் கூறியிருந்தது.
ஆனால் அதன் சில நாட்களுக்குள் கரூரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்தது.இந்த துயர சம்பவம் தவெகவிற்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.தமிழக அரசு மற்றும் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு எழுந்தது.
விபத்துக்கான காரணம் குறித்து அரசியல் கட்சிகள் பல்வேறு கருத்துகளை வெளியிட்டன.அதில், விஜய்க்கு ஆதரவாக அதிமுகவும் பாஜகவும் வெளிப்படையாக களம் இறங்கின.இதையடுத்து தவெக தரப்பு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, சிபிஐ விசாரணையும், சிறப்பு விசாரணை குழுவையும் கோரியது.உச்சநீதிமன்றம் இதனை ஏற்று சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.
இப்போது, இதே பின்னணியில் திமுக ஐடி விங் கடும் விமர்சனத்துடன் ஒரு கார்ட்டூனை வெளியிட்டுள்ளது.
அதில், பல்லக்கில் பிரதமர் நரேந்திர மோடி அமர்ந்திருப்பது போலவும், அதனை முதன்மை ஆளாக எடப்பாடி பழனிசாமி தூக்கிச் செல்வது போலவும், பின் பக்கத்தில் மறைமுகமாக தவெக தலைவர் விஜய் தூக்கிச் செல்கிறார் போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.
அந்த கார்ட்டூனில் “அடிமைகள் உடம்பில் ரத்தம் எதற்கு?” என்ற பாடல் வரி குறிப்பிடப்பட்டுள்ளதால், அது மேலும் சர்ச்சையை தூண்டியுள்ளது.
சமூக ஊடகங்களில் இந்த கார்ட்டூன் தற்போது வைரலாகி,ஒருபுறம் திமுக ஆதரவாளர்கள் விஜயை விமர்சிக்க,மறுபுறம் தவெக ஆதரவாளர்கள் இதை அரசியல் நையாண்டியாகக் கண்டித்து வருகின்றனர்.
2026 தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் மேடையில் சதுரங்கக் களமாக மாறியிருக்கும் இந்த சூழலில், விஜயின் அடுத்த அரசியல் முடிவு தான் இப்போது மாநிலம் முழுவதும் ஆர்வத்தை கிளப்புகிறது.
English Summary
Why is there blood in the bodies of slaves Vijay is indirectly supporting BJP DMK IT Wing criticizes cartoon publication