புதிய உச்சம்! இன்னும் ஓரிரு நாளில் ஒரு லட்சத்தை தொடும் தங்கம் விலை!
Today Gold Price
தங்கம் விலை கடந்த வாரம் தொடக்கம் இடையறாது உயர்வைச் சந்தித்து வருகிறது. அக்டோபர் 7ஆம் தேதி ஒரு சவரன் ரூ.90,000-ஐ எட்டிய நிலையில், அதன்பிறகும் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டது.
நேற்று தங்கம் விலை மேலும் உயர்ந்தது. காலை ஒன்றுக்கு கிராமுக்கு ரூ.25, சவரனுக்கு ரூ.200 உயர்ந்த நிலையில், பிற்பகலில் மீண்டும் கிராமுக்கு ரூ.55, சவரனுக்கு ரூ.440 உயர்ந்தது.
இதனால் ஒரே நாளில் கிராமுக்கு மொத்தம் ரூ.80, சவரனுக்கு ரூ.640 உயர்ந்தது. அதன் பிறகு தங்கம் ஒரு கிராம் ரூ.11,580, ஒரு சவரன் ரூ.92,640க்கு விற்பனையாகியது.
இந்த நிலையில் இன்று விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. காலை நிலவரப்படி, கிராமுக்கு ரூ.245 அதிகரித்து ரூ.11,825க்கும், சவரனுக்கு ரூ.1,960 உயர்ந்து ரூ.94,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் தங்கம் போன்று உச்சத்தைக் கண்டுள்ளது. இன்று கிராமுக்கு ரூ.9 உயர்ந்து ரூ.206க்கும், கிலோவுக்கு ரூ.9,000 உயர்ந்து ரூ.2,06,000க்கும் விற்பனையாகிறது.