சிபிஐ விசாரணை தீர்ப்பு அதிர்ச்சியில் த.வெ.க! புஸ்சி ஆனந்த், நிர்மல் குமார் தலைமறைவிலிருந்து வெளியே வந்து திடீர் சந்திப்பு...!
TRP shocked by CBI probe verdict Pussy Anand Nirmal Kumar come out hiding and have surprise meeting
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக (த.வெ.க) பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த சம்பவம் தொடர்பாக த.வெ.க பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், இணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்ட பலர் மீது காவலர்கள் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

இதனையடுத்து, கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் கரூர் மத்திய மாநகர நிர்வாகி பவுன் ராஜ் கைது செய்யப்பட்டனர். ஆனால், புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் இருவரும் வழக்குத் தொடங்கியதிலிருந்து தலைமறைவாகி, அவர்களைத் தேடி 5 சிறப்பு காவல் குழுக்கள் அமைக்கப்பட்டன.
இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இந்த தீர்ப்பைத் தொடர்ந்து, தலைமறைவில் இருந்த புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் இருவரும் இன்று வெளியே வந்து பொதுமக்கள் முன் தோன்றினர்.மேலும், வெளியே வந்த உடனேயே நிர்மல் குமார் முதலில் த.வெ.க தலைவர் விஜய்யை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் புஸ்சி ஆனந்த் விஜய்யை நேரில் சந்தித்து சுமார் 20 நிமிடங்கள் நீடித்த ஆலோசனையில் ஈடுபட்டார்.அந்த சந்திப்பில், உச்சநீதிமன்றம் தீர்ப்பின் தாக்கம், கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மற்றும் சட்டரீதியான எதிர்கால முடிவுகள் குறித்து இருவரும் தீவிரமாக கலந்துரையாடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்பு முடிந்ததும் புஸ்சி ஆனந்த் கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி நோக்கி புறப்பட்டுச் சென்றார். இந்தச் சம்பவம் த.வெ.க வட்டாரத்தில் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
TRP shocked by CBI probe verdict Pussy Anand Nirmal Kumar come out hiding and have surprise meeting