அவர்கள் என் குடும்பம் தான்! - 41 பேரின் குடும்பங்களையும் தத்தெடுக்கும் விஜய்...! - Seithipunal
Seithipunal


கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசல் பேரவலையை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், விசாரணை சரிவர நடைபெற ஒரு சிறப்பு கண்காணிப்பு குழுவை அமைத்துள்ளது. அந்தக் குழுவுக்கு ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையேற்பார்; மேலும், அதில் 2 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் இடம்பெறுவார்கள். இந்தக் குழு, சிபிஐ மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையையும் கண்காணிக்கும் பொறுப்பில் இருக்கும் என்று உச்சநீதிமன்றம் தெளிவாக உத்தரவிட்டுள்ளது.

இந்த தீர்ப்பைத் தொடர்ந்து, த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்தார்.அப்போது அவர் உணர்ச்சியுடன் தெரிவித்ததாவது,"நாங்கள் தற்போது கடினமான பயணத்தில் இருக்கிறோம்; பேசும் வார்த்தைகளே தடைபடுகின்றன.

இது எங்களுக்கு ஒரு மிகப் பெரிய நெருக்கடியான தருணம்" என்று தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,"கரூரில் நடந்தது விஜய் நடத்திய முதல் கூட்டம் அல்ல. காவல்துறை கூறிய நேர வரம்புக்குள் அனைத்தும் நடைபெற்றன. ஆனால், எங்களை மாவட்ட எல்லையில் காவல்துறை வரவேற்று ஒரு திட்டமிட்ட இடத்துக்கு அழைத்துச் சென்றது சந்தேகத்திற்கிடமானது. இது மற்ற மாவட்டங்களில் எங்கும் நடக்கவில்லை"என்றார்.

தமிழக அரசின் விசாரணை மீது நம்பிக்கை இல்லை என்றும்,“அந்த நாளிலிருந்து தி.மு.க. நாடகமாடி வருகிறது. எங்கள் கட்சியை முடக்க முயற்சிகள் நடந்தன. இருந்தாலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு விஜய் உடனடியாக இழப்பீடு அறிவித்தார்” என ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,"உயர் நீதிமன்றத்தில் எங்களுக்கு எதிராக கடுமையான குறிப்புகள் இடம்பெற்றதால், நாங்கள் சுப்ரீம் கோர்ட்டை அணுகினோம். இன்று அந்த நீதிமன்றம் எங்கள் மூன்று கோரிக்கைகளையும் - சிபிஐ விசாரணை, கண்காணிப்பு குழு, நீதியாய்வுக் கண்காணிப்பு - ஏற்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

இது எங்களுக்கு உண்மை மற்றும் நீதி கிடைத்த நாள்” எனக் குறிப்பிட்டார்.அதோடு, விஜய், கரூர் பேரதிர்ச்சியில் உயிரிழந்த 41 குடும்பங்களையும் தத்தெடுக்க முடிவு செய்துள்ளதாகவும், “அவர்களின் வாழ்நாள் முழுவதும் த.வெ.க. அவர்களுடன் இருக்கும்” என ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

They my family Vijay adopts families 41 people


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->