ஐசிஎஸ் தேர்வில் வெற்றிபெற்ற முதல் பெண்மணி சி.பி.முத்தம்மா அவர்கள் நினைவு தினம்!. - Seithipunal
Seithipunal


இந்தியக் குடிமைப் பணிகள் தேர்வு என்று அழைக்கப்படும் ஐசிஎஸ் தேர்வில் வெற்றிபெற்ற முதல் பெண்மணி சி.பி.முத்தம்மா அவர்கள் நினைவு தினம்!.

சி.பி.முத்தம்மா (Chonira Belliappa Muthamma, ஜனவரி 24, 1924 - அக்டோபர் 14, 2009) இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற முதல் பெண் அதிகாரி சி.பி.முத்தம்மா 1924ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி கர்நாடக மாநிலம் விராஜ்பேட்டையில் பிறந்தார்.

 இவர் முதல் பெண் வெளியுறவுத்துறை அதிகாரியாக 1949ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார். ஆண், பெண் அதிகாரிகள் இடையே பாகுபாடு, தனித்தனி விதிமுறைகள் என சட்டப் பிரிவில் கூறப்பட்டிருந்தது. இதுபோன்ற சட்டங்கள் அரசியல் சாசனத்துக்கு எதிரானவை. இந்த பாலினப் பாகுபாடுகள் களையப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் முத்தம்மா.

 வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணய்யர் இந்த விதிகள் அரசியல் சாசனத்துக்கு முரண்பட்டது என்று அறிவித்து, இவர் பதவி உயர்வுக்கு எல்லா வகையிலும் தகுதியானவர் என்றும் தீர்ப்பு கூறினார். வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த தீர்ப்பு சட்டத்தை திருத்தி எழுத ஒரு வாய்ப்பாக அமைந்தது.

 ஆதரவற்றோர் இல்லம் கட்ட டெல்லியில் இருந்த தனது சொந்த நிலத்தில் 15 ஏக்கரை அன்னை தெரசாவுக்கு வழங்கியவர். நெதர்லாந்து நாட்டின் இந்திய தூதராக நியமிக்கப்பட்டார். 

 இந்திய ஆட்சிப் பணிகளில் பெண் அதிகாரிகளின் சமத்துவத்துக்காகப் போராடி அவர்களுக்கு சம உரிமை பெற்றுத்தந்த சி.பி.முத்தம்மா, 2009-ம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி தமது 85 வயதில் மறைந்தார்.


உலகத்தர நிர்ணய தினம்!

 உலகத்தர நிர்ணய தினம் (World Standard Day) என்பது ஆண்டுதோறும் அக்டோபர் 14 ஆம் தேதி உலகளாவிய முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது.

 உலகில் மனிதனால் உற்பத்தி செய்யப்படும் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் தரம் மற்றும் தர நிர்ணயம் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு புகுத்தவே சர்வதேச தர நிர்ணய நிறுவனம், IEC, ISO (International Organization for Standardization) மற்றும் ஐவுரு அமைப்புகளும் ஒன்று சேர்ந்து 1970ஆம் ஆண்டிலிருந்து, அக்டோபர் 14 ஆம் தேதியை உலகத்தர நிர்ணய தினமாக அனுசரித்து வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Commemoration day of C B Muthamma, the first woman to pass the ICS exam


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->