கடலூரில் கலக்கம்! பாஜக நிர்வாகி முதல் குடும்பம் வரை லாட்டரி வலையில்...1 -ரூ.22 லட்சம் பறிமுதல்
Panic in Cuddalore From BJP executive to family in lottery trap Rs22 lakhs confiscated
கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் பகுதியில் ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனை நடப்பதாக காவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து புதுநகர் காவலர்கள் நேற்று மாலை அதிரடி ரோந்தில் ஈடுபட்டனர்.அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த ஜெயராமன் (62), அவரது மனைவி மல்லிகா (55), மகன் சாரதி மற்றும் புதுப்பாளையத்தை சேர்ந்த பிரகாஷ் (44) ஆகிய நால்வரையும் காவலர்கள் தடுத்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், இவர்கள் அனைவரும் ஆன்லைன் வழியாக சட்டவிரோத லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்தது வெளிச்சத்துக்கு வந்தது. அதன்பேரில், நால்வரையும் கைது செய்த காவலர்கள், அவர்களிடமிருந்து 5 மொபைல் போன்கள் மற்றும் ரூ.22 லட்சத்து 94 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.இதில் முக்கிய குற்றவாளியான ஜெயராமன் மீது ஏற்கனவே 18 லாட்டரி வழக்குகள், பிரகாஷ் மீது 3 வழக்குகள் இருப்பதும் அதிர்ச்சியாக வெளிச்சத்துக்கு வந்தது. மேலும், பிரகாஷ் கடலூர் பாஜக நெசவாளர் அணி நிர்வாகியாக பணியாற்றி வந்தது தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் கடலூர் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட நால்வரிடமும் காவலர்கள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Panic in Cuddalore From BJP executive to family in lottery trap Rs22 lakhs confiscated