#சென்னை : அரிய வகை வெள்ளை நாகப்பாம்பு கண்டுபிடிப்பு - அதிர்ச்சியில் உறைந்த சென்னை வாசிகள்!
white snake in chennai central railway station
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் அரிய வகை வெள்ளை நாகப்பாம்பை பிடித்த வனத்துறையினர், அதனை மீட்டு வேளச்சேரியில் உள்ள வனச்சரக அலுவலகத்திற்கு எடுத்து சென்றனர்.
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரெயில் நிலையத்தின் 10 அடுக்கு மாடி கட்டிடத்தில், மூன்றாவது மாடி வணிக அலுவலகம் உள்ளது.
சம்பவம் நடந்த நேற்று முன்தினம் மதியம், இந்த அலுவலகத்தின் உள்ளே வழக்கத்திற்கு மாறான நிறத்தில் பாம்பு ஒன்று சுற்றித்திரிந்ததை பணியாளர்கள் பார்த்து கூச்சலிட்டனர்.

உடனடியாக இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த வனத்துறையினர், அந்த வெள்ளை நிற பாம்பை பிடித்தனர்.
இது ஒரு அரியவகை வெள்ளைநிற நாகப்பாம்பு என்பதாய் அறிந்த வனத்துறையினர், பாம்பினை வேளச்சேரியில் உள்ள வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இந்த பாம்பில் நீளம் சுமார் 2½ அடி நீளம் என்பது தெரியவந்துள்ளது.
English Summary
white snake in chennai central railway station