வீட்டில் பிரசவம் பார்க்க வாட்ஸப் குழு - உறுப்பினர்களின் எண்ணிக்கையை பார்த்து பதறிய போலீஸ்.! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் மனோகரன். பொக்லைன் வாகனம் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவருக்கு திருமணமாகி சுகன்யா, என்ற மனைவியும், கோபிகா, தாரணி, என்ற இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இதற்கிடையே சுகன்யா மூன்றாவதாக கர்ப்பம் ஆன நிலையில் கடந்த 17-ஆம் தேதி அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து மனோகரன் தானாகவே பிரசவம் பார்த்துள்ளார்.

மேலும் இது குறித்த தகவலை அவர் வைத்திருந்த வாட்ஸ் அப் குழுவில் பகிர்ந்துள்ளார். இதனை அறிந்த வட்டார மருத்துவ அலுவலர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் படி போலீசார் விசாரணை மேற்கொண்டதையடுத்து அவரது செல்போனை போலீசார் வாங்கிப் பார்த்ததில், “வீட்டில் குழந்தை பெற்றவர்களின் அனுபவம்” என்ற தலைப்பில் வாட்ஸ்அப் குழு ஒன்று அமைத்து அதில் மனோகரன் குழு உறுப்பினராக இருப்பது தெரியவந்தது.

இந்தக் குழுவில் 1024 உறுப்பினர்கள் இருந்துள்ளனர். மேலும் வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது எப்படி என்று ஏராளமான தகவல்களை பகிர்ந்ததும், அந்த தகவல்களை பார்த்து மனோகரன் தனது மனைவிக்கு பிரசவம் பார்த்ததும் தெரியவந்துள்ளது. 

தற்போது மனோகரின் மனைவியும் குழந்தையும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து இருக்கின்றனர். இருப்பினும் ஏற்கனவே வீட்டில் பிரசவம் பார்த்து உயிர் இழப்பு சம்பவங்கள் நடைபெற்றிருக்கும் நிலையில் இது போன்ற விபரீதமான வேலைகளை யாரும் ஈடுபட வேண்டாம் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

whatsapp group create children both home


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->