நினைத்தது நடக்கவில்லை..திருட வந்த இடத்தில அயர்ந்து தூங்கிய திருடன்! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் வீட்டில் திருட வந்த இடத்தில  கதவின் பூட்டை உடைக்க முயற்சி செய்ததும், அது முடியாமல் போனதால் திருடன் போதையில் அங்கு படுத்து அய்ந்து தூங்கி விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் சமீப காலமாக கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளது. கொள்ளையடிக்க வரும் திருடர்கள் திருட முடியாமல் அங்கே அசந்து தூங்கிய சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. ஒரு சில இடங்களில் திருடிவிட்டு அங்கேயே மது அருந்தி அயந்து தூங்கிய திருடர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். ஒரு சில இடங்களில் திருடர் செல்லும் போது திருட முடியாமல் திருடர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விடுகின்றனர். என்னதான் காவல்துறை பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினாலும் பொதுமக்கள் அதை புரிந்து கொண்டு வீட்டை பத்திரமாக இருப்பது  நமது கடமையாகும். சில நேரங்களில் பொதுமக்கள் அதை தவறி விடுகின்றனர். காற்றுக்காக  கதவை திறந்து வைத்து தூங்குவது இது போன்ற சில நிகழ்வுகளால் பல இடங்களில் கொள்ளை சம்பவங்களும் அரங்கேறி உள்ளன.

 இதநிலையில் திண்டுக்கல் அருகே திருட வந்த இடத்தில் பூட்டை உடைக்க முடியாததால் போதையில் அந்த ஆசாமி அங்கே படுத்து தூங்கி சம்பவம் அரங்கேறி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் அதிக அளவு நூற்பாலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பெரும்பாலும் வடமாநில தொழிலாளர்களே பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை அதே பகுதியைச் சேர்ந்த பஷீர் என்பவர் தனது வீட்டு மாடிக்கு சென்ற போது அங்கு ஒருவர் தூங்கிக் கொண்டு இருந்தார்.

இதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்து அக்கம் பக்கத்தில் இருந்த வர்களை அழைத்து அந்த வாலிபரை எழுப்ப முயன்றபோதுதான் அவர் அளவுக்கு அதிகமான போதையில் இருந்தது தெரியவந்தது. மேலும் ஜவுளிக்கடை மாடியில் இருந்த கதவின் பூட்டை உடைக்க முயற்சி செய்ததும், அது முடியாமல் போகவே போதையில் அங்கு தூங்கி விட்டதும் பொதுமக்களுக்கு தெரிய வந்தது. 

இதனைத் தொடர்ந்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து  போதையில் இருந்தத அந்த வாலிபரை போலீசார் மீட்டனர் . அவருடன் வந்த மற்றொரு வடமாநில வாலிபர் தப்பி ஓடியது தெரிய வரவே அவரையும் போலீசார் தேடி வருகின்றனர். அவர்கள் 2 பேரும் டாஸ்மாக் கடையில் மது குடித்து விட்டு இரவு 11 மணிக்கு மேல் மக்கள் தூங்கியவுடன் திருட திட்டமிட்டு போதை அதிகமானதால் ஒருவர் அங்கேயே தூங்கி விட்டதும், மற்றொருவர் தப்பிச் சென்றதும் விசாரணையில் தெரிய வந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

What was thought did not happen The thief slept lazily at the place he came to steal


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?


செய்திகள்



Seithipunal
--> -->