செங்கோட்டையன் செய்வது சரி..அமித்ஷாவின் ஆசையும் அதுதான்.. செங்கோட்டையனுக்கு ஆதரவாக களமிறங்கிய ஆடிட்டர் குருமூர்த்தி!
What Sengottaiyan is doing is right that is also Amit Shah wish Auditor Gurumurthy came out in support of Sengottaiyan
அதிமுகவில் மீண்டும் குழப்பம் கிளப்பும் வகையில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வீசிய சரவெடி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரிந்த தலைவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அவர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நேரடியாக 10 நாட்கள் கெடு விதித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், “சசிகலா, ஓ. பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் உள்ளிட்ட அனைவரையும் மீண்டும் கட்சியில் சேர்த்து, ஒன்றிணைக்க வேண்டும். அதுவே கட்சிக்குப் பலம் தரும்” என்று வலியுறுத்தினார்.
ஏற்கனவே, தென் மாவட்டங்களிலும் டெல்டா பகுதிகளிலும் அதிமுக பலவீனமடைந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கொங்கு மண்டலத்திலும் அழுத்தம் அதிகரிப்பது, எடப்பாடிக்கு புதிய சவாலாக மாறியுள்ளது.
இந்நிலையில், பாஜகவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டதாகக் கூறப்படும் ஆடிட்டர் குருமூர்த்தி, செங்கோட்டையனுக்கு ஆதரவாக பேசி இருக்கிறார். தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் அவர்,
“செங்கோட்டையன் குரல் கலகக் குரல் அல்ல.எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்பதில்தான் அவர் வலியுறுத்துகிறார்.அது எடப்பாடிக்கு பெருமையாக இருக்க வேண்டிய விஷயம்.ஆனால் அதில் அவருக்கு விருப்பம் இல்லாமல் இருக்கலாம்,” என்று தெரிவித்தார்.
மேலும், “எடப்பாடி பழனிசாமி கட்சிக்கு நல்லதா, இல்லையா என்பதையே யோசிக்கிறார். அதில்தான் எனக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு உள்ளது. அனைவரும் சேர வேண்டும் என்று அமித்ஷா கூட விரும்புகிறார். அதுகுறித்து பாஜகவினருக்கும் அவர் அறிவுறுத்தியுள்ளார்” என்று குருமூர்த்தி நேரடியாக குறிப்பிட்டுள்ளார்.
செங்கோட்டையனின் கருத்துக்களை வெளிப்படையாக ஆதரித்து, எடப்பாடியை விமர்சித்த குருமூர்த்தியின் இந்தப் பேட்டி, அதிமுக-பாஜக உறவுகளை மேலும் சிக்கலாக்கும் நிலையில் உள்ளது.
English Summary
What Sengottaiyan is doing is right that is also Amit Shah wish Auditor Gurumurthy came out in support of Sengottaiyan