அக்கா கணவர் செய்த செயல்..16 வயது சிறுமி கர்ப்பம்..அடுத்து நடந்த அதிர்ச்சி!  - Seithipunal
Seithipunal


திருச்சி அருகே16 வயது சிறுமியை மிரட்டி  கர்ப்பமாக்கிய அக்கா கணவரை  போக்சோவில் போலீசார் கைது செய்துள்ளனர்.

திருச்சி அருகே உள்ள மண்ணச்சநல்லூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி தனது  பெற்றோர் இறந்து விட்டதால் அந்த சிறுமி தனது உறவினர் வீட்டில் தங்கி படித்து வந்தார். சிறுமியின் பெரியப்பா மகளை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சாமுவேல் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.

இதையடுத்து அவருடைய வீட்டிற்கு அந்த சிறுமியை அனுப்பி, அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படிப்பதற்காக சேர்த்துள்ளனர். அதன்படி சிறுமி அக்கா வீட்டில் தங்கி, அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த சிறுமியை, சாமுவேல் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

பின்னர் சாமுவேலின் தொந்தரவு காரணமாக அங்கு இருக்க பிடிக்காமல், சிறுமி மற்றொரு ஊரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டாள் . இதையடுத்து அவர் ஒரு தனியார் காப்பகத்தில் தங்கி படித்தார். அந்த காப்பகத்திற்கு சாமுவேல் சென்று அந்த  சிறுமியை தனது வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அவருடன் செல்ல மறுத்த சிறுமி, நடந்த சம்பவம் பற்றி தனது உறவினரிடம் கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து அந்த சிறுமியை மாவட்ட குழந்தைகள் நலக்குழு அலுவலகத்தில் அவரது உறவினர் ஆஜர்படுத்தினார். பின்னர் சிகிச்சைக்காக சேர்த்தபோது சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

மேலும் சிறுமி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சாமுவேல் மீது திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சாமுவேலை கைது செய்தனர். பின்னர் அவரை திருச்சி மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தி, நீதிபதி உத்தரவின்பேரில் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

What my sister and husband did A 16 year old girl is pregnant The next shock


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->