அடுத்த கட்டத்திற்கு சென்ற தமிழக அரசு.. இனி வாரத்தில் இரண்டு நாள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அதிகரித்த வந்த கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வரும் நிலையில், அதனை மேலும் கட்டுக்குள் வைக்கும் பொருட்டு தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வார இறுதி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையில் மெகா தடுப்பூசி முகாம்கள் வாயிலாக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

முன்னதாக, அசைவ பிரியர்கள் மற்றும் குடிகாரர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் தடுப்பூசி முகாம்களில் கலந்துகொள்ள ஆர்வம் தெரிவிக்கவில்லை என்பதால், அவர்களும் தடுப்பூசி செலுத்துவதை ஊக்குவிக்கும் பொருட்டு சனிக்கிழமையில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.

இந்நிலையில், இனி வாரந்தோறும் இரண்டு நாட்கள் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வாரந்தோறும் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை என இரண்டு நாட்கள் மெகா தளபதி முகாம் நடத்தப்படும். தடுப்பூசி போடும் பணியாளர்களுக்கு திங்களன்று விடுப்பு அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

weekly 2 days mega vaccine camp


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->