ரேஷன் கடையில் கெட்டுப்போன பருப்பு விநியோகம்.. பொதுமக்கள் வாக்குவாதம்.!
Waste Dall in ranipettai ration Shop
ராணிப்பேட்டை அருகே ரேஷன் கடையில் மக்கிப்போன பருப்பு வினியோகம் செய்யப்பட்டதால் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த மேட்டு காலனி பகுதியில் ரேஷன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் ரேஷன் கடை திறக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மாலை ரேஷன் கடையில் அரிசி பருப்பு எண்ணெய் சர்க்கரை போன்ற பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதில் பொது மக்களுக்கு வழங்கப்பட்ட பருப்பு கெட்டுப்போயி கட்டியாக இருந்தது.
இதனை பொதுமக்களுக்கு வழங்கியதால், இந்தப் பருப்பு வேண்டாம் எனவும் அடுத்த மாதம் சேர்த்து வழங்குங்கள் என கூறியுள்ளனர். இதனால் ரேஷன் கடை விற்பனையாளருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ரேஷன் கடை விற்பனையாளர் எங்களுக்கு இந்த பருப்புதான் வந்துள்ளது. அதைத்தான் நாங்கள் கொடுக்க முடியும் என வாக்குவாதம் செய்துள்ளார். இதனையடுத்து ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு தரமான பருப்பு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
Waste Dall in ranipettai ration Shop