விநாயகர் சதுர்த்தி  .அஞ்சுகிராமம் ஸ்ரீ அழகிய விநாயகர் கோவிலில் விழா ஏற்பாடுகள் தீவிரம்! - Seithipunal
Seithipunal


குமரி மாவட்டத்தில் புகழ் பெற்ற அஞ்சுகிராமம் ஸ்ரீ அழகிய விநாயகர் கோவிலில் வரும் 25-ம் திங்கள்  தொடங்கி 27 புதன், வரை மூன்று நாட்கள் நடைபெறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருவாசக முற்றோதுதல் நிகழ்ச்சியை எம்.ஆர் காந்தி எம்.எல்.ஏ தொடங்கி வைக்கிறார். 

குமரி மாவட்டத்தில் புகழ் பெற்ற அஞ்சுகிராமம் ஸ்ரீ அழகிய விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. அஞ்சுகிராமத்தை சுற்றியுள்ள மக்கள் ஜாதி, மதம்,மொழி,இனம் கடந்து இங்கு வருகை தருகிறார்கள். மேலும் இக்கோவிலின் வரி உறுப்பினர்களாக இணைந்துள்ளார்கள். 

வருடம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. தினமும் காலை,மாலை பூஜைகள் மற்றும் சுவாமிக்கு அர்ச்சனை நடைபெற்று வருகிறது. வரும் 25-ம் திங்கள்  தொடங்கி 27 புதன், வரை மூன்று நாட்கள் நடைபெறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருவாசக முற்றோதுதல் நிகழ்ச்சியை எம்.ஆர் காந்தி எம்.எல்.ஏ தொடங்கி வைக்கிறார். 

மாலை மெல்லிசையை தொழிலதிபர் ஜவஹர் ஸ்டோர் உரிமையாளர் ஜெஸீம் தொடங்கிவைக்கிறார் . அழகிய விநாயகர் ஊர்வலத்தை தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ, ஜெயசந்திரன் டி.எஸ்.பி தொடங்கிவைக்கிறார்கள். மேலும் சமய சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள், விநாயகர் வீதி உலா, நலதிட்ட உதவிகள்,அன்னதானம், இன்னிசை கச்சேரி, நாடகம், பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். மேலும் அஞ்சுகிராமம் வர்த்தகர்கள் நல சங்க தலைவர் வஸீம், செயலாளர் ராஜலிங்கம்,பொருளாளர்  கணகராஜ் ஆகியோர் சார்பில் பல நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 

மேலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஸ்ரீ அழகிய விநாயகர் கோவில் நிர்வாக குழு தலைவர் வாரியூர் நடராஜன், செயலாளர் காணிமடம் ஆசிரியர் தங்கபாண்டியன், பொருளாளர் முருகன் செயற்குழு உறுப்பினர்கள்  சுப்பிரமணியன், சந்திரன், பரமசிவன், சங்கரன், சக்திவேல், சந்திரன், மகேஷ், ஆதித்தன், செல்லத்துரை, பரஞ்சோதி, பால்ராஜ், முத்துக்குமார், ஆனந்தராஜன், மணி, ராமகிருஷ்ணன், சுரேஷ் ஆகியோர்  பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகளை  செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vinayagar Chaturthi Preparations for the festival at Sri Alagiyah Vinayakar Temple in Anjukiramam are in full swing


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->