'அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக அரசு விவசாயிகளைப் பழி வாங்குகிறது: அடுத்த அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு விடிவுகாலம் பிறக்கும்': எடப்பாடி பழனிசாமி பேச்சு..!
Edappadi Palaniswami says DMK government is taking revenge on farmers through political vandalism
அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் சட்டசபை எதிர்க்கட்டி தலைவர் எடப்பாடி பழனிசாமி 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அதன் மூன்றாவது கட்டத்தைத் தொடங்கிய இன்று வேப்பனஹள்ளி, தளி மற்றும் ஓசூர் சட்டமன்றத் தொகுதிகளில் தொடங்கி அங்குள்ள மக்களை சந்தித்துள்ளார்.
இன்று மாலை வேப்பனஹள்ளி தொகுதிக்குட்பட்ட ராயக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் பெருமளவு கூடியிருந்த அப்பகுதி மக்களிடம் எடப்பாடி பழனிசாமி உரையாற்றிய போது கூறியதாவது:
ராயக்கோட்டை பகுதி ஸ்தம்பிக்கும் அளவுக்கு மக்கள் வெள்ளத்தைப் பார்க்கிறேன். உங்கள் மகிழ்ச்சியே தேர்தல் வெற்றிக்கான திருப்புமுனை என்று தெரிவித்தார். அத்துடன், விவசாயிகள் நிறைந்த இந்த பகுதிக்கு நிறைய திட்டங்கள் கொடுத்தோம் என்றும், இங்கு மலர்கள் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறதோடு, பழங்கள் மற்றும் காய்கறிகளும் அதிகம் உற்பத்தியாகிறது என்று பேசினார்.
மேலும், இந்த தொழில்கள் சிறப்பாக நடைபெறுவதற்காக இந்தோ- இஸ்ரோ கொய்மலர் சாகுபடி பயிற்சி மையம் உருவாக்கிக் கொடுத்தாகவும், மலர்கள் விற்பதற்கு சர்வதேச ஏல மையம் ஒன்றை 20 கோடியில் அமைத்துக்கொடுத்ததாகவும் குறிப்பிட்டார். அத்துடன், பெங்களூரு சென்று விற்கும் அவல நிலையை மாற்றி இங்கேயே நல்ல விலை கிடைப்பதற்கு இந்த ஏற்பாடு செய்தாகவும் குறிப்பிட்டார். ஆனால், அந்த மையம் தற்போது அப்படியே பூட்டிக்கிடக்கிறது என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக அரசு விவசாயிகளைப் பழி வாங்குகிறதாகவும், மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் சர்வதேச ஏல மையம் திறக்கப்படும் என்று மக்கள் முன் உரையாற்றினார்.
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாம்பழம் கடுமையான விலை வீழ்ச்சி ஏற்பட்டநிலையில், இதற்கு அரசாங்கம் இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். ஆனால், அரசு அதை காதில காதில் போட்டுக்கொள்ளவே இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார். ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு தரவேண்டும், ஒரு கிலோ மாம்பழம் 13 ரூபாய் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று, மா விவசாயிகளின் கோரிக்கைகளுக்காகப் போராட்டம் நடத்தினோம் என்றும், அதிமுக ஆட்சி மீண்டும் மலர்ந்தவுடன் மா விவசாயிகளுக்கு விடிவுகாலம் பிறக்கும் என்று எடப்பாடி பழனிசாமி மேலும் பேசியுள்ளார்.
English Summary
Edappadi Palaniswami says DMK government is taking revenge on farmers through political vandalism