சேலம் வந்தடைந்தது பிரேமலதா விஜயகாந்தின் ரத யாத்திரை.!!
premalatha vijayakant captain ratha yathirai in salem
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தற்போது முதலே அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்து கட்சிகளும் தற்போது முதலே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் "உள்ளம் தேடி இல்லம் நாடி" என்ற பெயரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளது. இந்த பிரசாரத்தின் ஒரு பகுதியாக விஜயகாந்த் நினைவாக கேப்டன் ரத யாத்திரையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த ரத யாத்திரை திருப்பத்தூரில் தொடங்கி தமிழகம் முழுவதும் பயணிக்கவுள்ளது. இந்த ரத யாத்திரை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கேப்டன் ரத யாத்திரை இன்று சேலம் வந்துள்ளது. சேலம் மேட்டூரில் நடைபெற்று வரும் இந்த யாத்திரை பயணத்தில் தேமுதிக பொருளாளர் சுதீஷ், தேமுதிக கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் என்று பலர் கலந்து கொண்டுள்ளனர்.
English Summary
premalatha vijayakant captain ratha yathirai in salem