மக்களுக்காக ஒரு பாலிசிய மாற்ற முடியவில்லை என்றால் அரசாங்கம் இருந்தா என்ன..? இல்லாமல் இருந்தா என்ன..? தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக பேசிய சனம் செட்டி..! - Seithipunal
Seithipunal


சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ராயபுரம், திரு.வி.க. நகர் பகுதிகளை உள்ளடக்கிய 05, 06 ஆகிய இரண்டு மண்டலங்களிலும் குப்பைகளை அள்ளும் பணி, மற்றும் பெண் தூய்மை பணியாளர்கள் மூலமாக சாலைகளை சுத்தம் செய்யும் பணி ஆகியவை தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடந்த மாநகராட்சியுடன் இணைந்து துப்புரவு பணியில் ஈடுபட்டு வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட சுமார் 2000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தூய்மை பணிகள் தனியார் மயமாக்கப்பட்டதை கண்டித்து சென்னை மாநகராட்சி முன்பு கடந்த 01-ந் தேதி முதல் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் சென்னை மாநகராட்சி முன்பு உள்ள நடைபாதையில் தற்காலிக பந்தல்களை அமைத்து இரவு பகலாக அங்கேயே தங்கியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த போராட்டம் இன்று 11-வது நாளை எட்டியுள்ள நிலையில்,  சென்னையில் போராட்டம் நடத்தி வரும் மாநகராட்சிப் பணியாளர்களை நடிகை சனம் ஷெட்டி நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். 

அப்போது அவர் கூறியதாவது: கொரோனா நாட்களில் நாம் உயிர் பயத்தில் இருந்தோம். அந்த நேரத்தில் தன்னுடைய குடும்பத்தை விட்டு விட்டு நமக்காக வந்தவங்க. ஊர் ஊரா.. தெரு தெருவா.. சுத்தம் சுத்தம் செய்தவங்க. என்னுடனைய நண்பர்கள். மேயர் பிரியா வாராங்க செய்தி சொல்லிவிட்டு போராங்க. அவரிடம் இருந்து தகவல் மட்டும்தான் வருது தீர்வு வரவில்லை. எத்தனை நாள் தான் இவர்கள் இப்படி இருக்க வேண்டும். அவர்களது வாழ்வாதாரத்தை பறித்து விட்டீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பணி நிரந்தரம் செய்வீர்கள் என்று நீங்க.. கொடுத்த வாக்குறுதியைதான் அவங்க கேட்கிறார்கள். உங்க வாக்குறுதியை நீங்க காப்பற்றவில்லை என்றால், இனிமேல் முதலமைச்சரிடம் எதை எதிர்பார்க்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், மக்களுக்காக தான் அரசாங்கம். மக்களுக்காக ஒரு பாலிசிய மாற்ற முடியவில்லை என்றால் அரசாங்கம் இருந்து என்ன இல்லாமல் இருந்தும் என்ன என்று பேசியுள்ளார். மேலும்,  உங்க வாக்குறுதியை தான் கேக்குறாங்க. இனிமேல் ஓட்டு கேட்டு எப்படி வருவீங்க. என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sanam Shetty expresses support for sanitation workers protest


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->