முந்திரி பருப்பு பார்பி - எப்படி செய்வது?
how to make munthiri paruppu barbi
வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு முதலில் இனிப்பு வழங்குவது வழக்கம். ஆனால், என்ன செய்வது என்று தெரியாமல் கேசரியை தான் செய்வோம். இந்த நிலையில் புதிய சுவையில் முந்திரி பருப்பு பார்பி எப்படி செய்வது என்று இந்தப் பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்:-
முந்திரி பறிப்பு
பிஸ்தா பருப்பு
பால்
பால் பவுடர்
சர்க்கரை
ஏலக்காய் பொடி
மில்க் மெய்ட்
குங்குமப்பூ
செய்முறை:-
முதலில் முந்திரி பருப்பை மிக்சியில் போட்டு தூளாக்கி அதில் பால்பவுடர், சர்க்கரை உள்ளிட்டவற்றை சேர்த்துக் கொள்ளவும். இதையடுத்து ஒரு பாத்திரத்தில் சுடுதண்ணீர் வைத்து அதில் பிஸ்தா பருப்பை ஊற வைத்து தோல் உரித்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு பால் ஊற்றி, குங்குமப்பூ சேர்த்து குழைத்துக் கொள்ளவும். இப்போது அனைத்துக் கலவையையும் சப்பாத்தி மாவு பிசைவது போல் பிசைந்து சப்பாத்திக் கல்லில் பரப்பி அதன் மேல் நறுக்கி வைத்துள்ள பிஸ்தா பருப்பை தூவி தேவையான வடிவத்தில் நறுக்கிக் கொள்ளலாம். இப்பொது சுவையான முந்திரி பார்பி தயார்.
English Summary
how to make munthiri paruppu barbi