ராணிப்பேட்டை அருகே கிணற்றில் பிணமாக மிதந்த ஊராட்சி மன்ற தலைவர்.!
village woman president sucide in ranipet
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெமிலி அடுத்த கீழ வெண்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முருகவேல் இவருடைய மனைவி மாலதி ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் மதுப்பழக்கத்திற்கு அடிமையான முருகவேல் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாலதி நேற்று அதே கிராமத்தில் கன்னியப்பன் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர் போலீசாரிடம் புகார் அளித்தார்.

அந்த புகாரின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் மிதந்த மாலதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து முருகவேலிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிணற்றில் குதித்து ஊராட்சி மன்ற பெண் தலைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
village woman president sucide in ranipet