திருப்பூரில் லஞ்சம் வாங்கிய ஊ.ம. தலைவர் - அதிரடி காட்டிய லஞ்ச ஒழிப்பு போலீசார்.!
village president arrested for bribe in tirupur
திருப்பூரில் லஞ்சம் வாங்கிய ஊ.ம. தலைவர் - அதிரடி காட்டிய லஞ்ச ஒழிப்பு போலீசார்.!
திருப்பூர் மாவட்டத்தில் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சுண்டக்காம்பாளையம் ஊராட்சியில் அ.தி.மு.க. வை சேர்ந்த ஆனந்த் (எ) லோகநாதன் என்பவர் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார்.
அதே பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். மக்காச்சோளம் அறைக்கும் ஆலை நடத்தி வரும் இவர் தனது ஆலை விரிவாக்கப்பணிக்காக சுண்டக்காம்பாளையம் ஊராட்சி மன்றத்தில் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளார்.

ஆலை விரிவாக்க பணிக்கு அனுமதி வழங்குவதற்காக ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்த் லோகநாதன், ராதாகிருஷ்ணனிடம் ஆறு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். அதில் ஒரு லட்சம் ரூபாய் முன்னதாகவே ராதாகிருஷ்ணன் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் ஆனந்த் மீதி லஞ்ச பணத்தை தொடர்ந்து கேட்டு வற்புறுத்தியதால், ராதாகிருஷ்ணன் திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
அதன் படி லஞ்ச ஒழிப்பு போலீசார், இரசாயன பொடி தடவப்பட்ட ரூபாய் நோட்டுகள் இரண்டு லட்சத்து முப்பதாயிரம் ரூபாயை ராதாகிருஷ்ணன் மூலமாக நேற்று ஆனந்திடம் கொடுத்துள்ளனர்.

அந்த பணத்தை ஆனந்த் வாங்கியுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கையும் களவுமாக ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்த் (எ) லோகநாதனை கைது செய்தனர்.
அவரிடம் சம்பம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஊராட்சி மன்ற தலைவர் லஞ்சம் பெறும் போது கையும் களவுமாக பிடிபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
village president arrested for bribe in tirupur