வீரனது வாழ்க்கையை உணர்த்தும் விஜயநகர காலத்து நடுகல்! கள ஆய்வில் கண்டெடுப்பு!
Vijayanagara Nadugal reflects
விஜயநகர காலத்து நடுகல் ஒன்று, திருப்பத்தூர் அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ் துறை பேராசிரியர் மோகன் காந்தி தலைமையில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பஞ்சனம் பட்டி கிராமம் சுற்று பகுதிகளில் கள ஆய்வு நடத்திய போது விஜயநகர காலத்து நடுகல் ஒன்றை ஆய்வு குழுவினர் கண்டறிந்துள்ளனர்.
பேராசிரியர் மோகன் காந்தி இது குறித்து தெரிவித்திருப்பதாவது, திருப்பத்தூர்-சேலம் பிரதான சாலையில் பஞ்சனம்பட்டி கிராம் அருகே விஜயநகர காலத்தின் நடுகல் ஒன்றை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம்.
இந்த நடுக்கல் 2.7 அடி உயரமும் 2.7 அகலம் உள்ளது. மேலும் இதில் மூன்று உருவங்கள் அழகிய கல்லில் செதுக்கப்பட்டுள்ளன.
நடுவில் காணப்படும் வீரனின் தோற்றமானது, மேல் வாரிய முடிக்கப்பட்ட கொண்டை, காதுகளில் பெரிய காதணிகள், கழுத்தில் நான்கு அடுக்கு கொண்ட ஆபரணங்கள், இடது கையில் நீண்ட வாழை அந்த வீரர் பிடித்துள்ளார்.
ஒற்றைத் தரையில் கை வில் ஊற்றியபடி அவர் நிற்கிறார். வீரனின் இருபுறமும் இரண்டு மங்கையர் நிற்கின்றனர். வலது புறம் நிற்கும் மங்கை தனது வலது கையை தொங்கவிட்டபடியும் இடது கையில் கல்குடம் ஒன்றை பிடித்த படியும் இடது பக்கம் வாரி முடிக்கப்பட்ட கொண்டையுடன் காட்சியளிக்கிறார்.
இடது புறம் நிற்கும் பெண், வலது கைவிரல்களை நீட்டியபடி இடது கையானது இடுப்பின் மேல் வைக்கப்பட்டு இடது பக்கம் வாரி முடிக்கப்பட்ட கொண்டையோடு காட்சி அளிக்கிறார்.
இந்த நடு கல் அவரது இரு மனைவியரும் உயிரிழந்த வீரனோடு தாங்களும் உடன்கட்டை ஏறி உள்ளதை வெளிப்படுத்துகிறது. தொல்லியல் துறை இந்த கல்வெட்டை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என தெரிவித்தார்.
English Summary
Vijayanagara Nadugal reflects