திமுக அரசு மீது குற்றம் சாட்டிய வேலூர் இப்ராஹிம்..காரணம் என்ன?   - Seithipunal
Seithipunal


பா.ஜ.க சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் வேலுார் இப்ராஹிம் ''தி.மு.க., ஆட்சியில், சிறுபான்மையினருக்கு எந்தவொரு நலத்திட்ட உதவிகளும் செயல்படுத்தவில்லை,'' என்று  குற்றம்சாட்டியுள்ளார்.

 நேற்று மத நல்லிணக்க செயல்பாடுகளின் ஒரு பகுதியாக, கோவை வந்த வேலுார் இப்ராஹிம், கிறிஸ்தவ பாதிரியார் பிரின்ஸ் தளியத்தை சந்தித்து பேச்சுவார்த்தை  நடத்தினார். அப்போது, சிறுபான்மையினர் நலன் கருதி, பா.ஜ.க அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து விளக்கினார்.

மேலும், வேலுார் இப்ராஹிம் தெரிவித்ததாவது, "பா.ஜ.க கட்சியில் சிறுபான்மை மக்களை இணைக்கும் நோக்கத்துடன், கோவை வந்து இருக்கிறேன். தற்போது, பாஜகவில்  20 பேர் இணைந்துள்ளனர். மேலும் பலர், இந்த மாத இறுதியில் நடக்கும் விழாவில், பாதிரியார் பிரின்ஸ் தளியத் முன்னிலையில் கட்சியில் இணைய உள்ளனர். இதையடுத்து, தமிழகத்தில் கஞ்சா விற்பனை தொடர்ந்து நடக்கிறது. மேலும், இந்த ஆட்சியில் பாலியல் கொடுமைகள் அதிகரித்துள்ளன.

தற்போதுள்ள தி.மு.க., அரசு சிறுபான்மையின மக்களுக்கு எந்தவொரு நன்மையும் செய்யவில்லை. ஆனால், மத்திய அரசு ஏராளமான நன்மைகளை செய்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, சிறுபான்மையினர் கல்விக்காக மட்டும், 5,126 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்" என்று இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, 'போனில் கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று பா.ஜ.க சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளரான  வேலுார் இப்ராஹிம், கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில்,

"நான் கோவை மாநகரில் உள்ள கணபதியில் இருந்தபோது, என் மொபைல் எண்ணுக்கு 'வாட்ஸ் ஆப்' மூலமாக, ஆடியோ மெசேஜ் வந்தது. அந்த ஆடியோவில், ஆண் குரலில் பதிவு செய்யப்பட்டிருந்த மெசேஜில் எனக்கு கொலை மிரட்டல் விடப்பட்டிருந்தது. 

எனக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார். இந்தப் புகாரை பெற்றுக் கொண்ட கமிஷனர் பாலகிருஷ்ணன், அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

velur ibrahim crime on dmk government


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->