கல்லூரி மாணவி குளிப்பதை வீடியோ எடுத்த காமுக ஆட்டோ ஓட்டுநர்.. தாக்குதல் சம்பவத்தால் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி விருதம்பட்டு பகுதியை சார்ந்த கல்லூரி மாணவி, நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் குளித்துக்கொண்டு இருந்துள்ளார். இதன்போது, அருகில் உள்ள வீட்டில் வசித்து வந்த ஆட்டோ ஓட்டுநர் ஆடம்ஸ் (வயது 42) என்ற காமுகன், அவனது வீட்டு மொட்டைமாடிக்கு சென்றுள்ளார். 

பின்னர், அங்கிருந்து மாணவி குளிப்பதை வீடியோ எடுத்து இருக்கிறான். இதனைகவனித்த மாணவி அலறி கூச்சலிடவே, குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்துள்ளனர். இதற்குள் ஆட்டோ ஓட்டுநர் மாடியில் இருந்து கீழே குதித்து தப்பி ஓடியுள்ளான். 

இதனையடுத்து, மாணவியின் பெற்றோர் விருதம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் ஆடம்ஸை தேடி வந்தனர். தலைமறைவாக இருந்த ஆடம்ஸ் வீட்டிற்கு பூனை போல வரவே, இதனைகவனித்த பொதுமக்கள் வீட்டோடு பூட்டி வைத்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் ஆடம்ஸை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். மேலும், ஆடம்ஸின் மீது இருந்த ஆத்திரத்தில், அவனது ஆட்டோ லேசாக சேதப்படுத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு சூழ்நிலை ஏற்பட்டது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vellore Katpadi College Girl Bathing Video Illegally Captured by Culprit Finally He Arrested by Police


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal