வேளாங்கண்ணி ஆலய திருவிழா.. செப்டம்பர் 11 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ தேவாலயங்களில் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயமும் ஒன்று. தமிழகத்தில் மிகச்சிறந்த ஆன்மிக சுற்றுலா தலமாகவும் உள்ளது.

இந்த பேராலயத்துக்கு தினமும் வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் வந்து செல்கின்றனர். அன்னை மரியாவின் பிறந்த நாளான செப்டம்பர் 8ம் தேதி அன்று ஆண்டுதோறும் ஆண்டு பெருவிழா நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டில் இந்த திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

அந்த வகையில், வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலய விழாவை முன்னிட்டு இன்று முதல் வருகிற செப்டம்பர் 11ம் தேதி வரை பக்தர்களின் நலன் கருதி சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. மேலும் 750 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

குறிப்பாக, சென்னை, பெங்களூரு, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோயில் உள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Velankanni special bus service till September 11


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->