கோத்தகிரியில் தொடங்கியது காய்கறி கண்காட்சி.! - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான காய்கறி கண்காட்சி கோத்தகிரியில் உள்ள நேரு பூங்காவில் தொடங்கியது. 

இந்த காய்கறி கண்காட்சியானது இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும், மலைத்தோட்ட காய்கறி விவசாயிகளின் வாழ்வாதரம் மேம்பட நடத்தப்படுகிறது. இதில் கோவை,விழுப்புரம், கள்ளக்குறிச்சி திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தோட்டக்கலைத்துறையினர் பங்கேற்றுள்ளனர்.

மேலும், சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் முதலை, டிராகன், யானை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட பொம்மைகள் காய்கறிகளால் உருவாக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக பூங்காவின் நுழைவுவாயில், பல்வேறு காய்கறிகள் கொண்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 

இதில் கத்தரிக்காய், பூசணிக்காய் ஆகியவற்றை கொண்டு டிராகன், ஊதா நிற கத்தரிக்காய் கொண்டு யானை உருவமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vegetable fair started in Kotagiri


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->